ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஜெயிலர்’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து படங்களில் பிஸியாக இருக்கும் ரஜினி, தனது சுயசரிதையையும் எழுதி வருகிறார்.
தனது நீண்டகால சினிமா பயணம், பெங்களூரில் தொடங்கி சென்னைக்கு வந்தது, திரையுலகில் சந்தித்த அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை அவர் தொகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுயசரிதையை வெப் சீரிஸாக உருவாக்கலாம் என்றும், அதில் ரஜினியின் கதாபாத்திரத்தில் ரிஷிகாந்த் நடிக்கலாம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தையின் சுயசரிதை எழுதும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், அந்தப் புத்தகம் வெளியான பிறகுதான் அதைவெப் சீரிஸாக எடுப்பது குறித்து யோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Listen News!