தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெங்கட் பிரபு குறித்து வெளியிட்டுள்ள பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு தொடர்பாக சில யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதையடுத்து, இயக்குநர் வெங்கட் பிரபு அந்த யூகங்களுக்கு விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில், அதற்கு சிவகார்த்திகேயன் அளித்துள்ள பதில் தற்போது வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் தனது பதிவில், “சார் நம்ம ஒரு குடும்பம். இதுக்கு போய் நீங்க சீரியஸா ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க. வாழ்த்துக்கு நன்றி. உங்களின் அடுத்த படத்திற்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும், வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் சிவகார்த்திகேயன் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். “நான் இதை முன்பே கூறி இருக்கிறேன். இருந்தாலும் இப்போது சொல்கிறேன். நான் எப்போதுமே வெங்கட் பிரபுவின் ரசிகன். உங்களுடன் பணியாற்ற காத்திருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த பதில், இருவருக்கும் இடையிலான நட்பையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எதிர்காலத்தில் சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது.
Listen News!