• Jun 04 2026

‘பெத்தி’ படம் பார்க்காதீங்க... ஜாப்பனீஸ் கத்துக்குங்க.! வைரலாகும் ப்ளூ சட்டை விமர்சனம்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விளையாட்டு, கிராமத்து அரசியல், உணர்ச்சிகள் மற்றும் மாஸ் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது  விமர்சனத்தில் பெத்தி படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அதன்படி அவர் தெரிவித்த விமர்சனம் வருமாறு,

ஆரம்பத்தில் படத்தின் கதையை விளக்கிய ப்ளூ சட்டை மாறன், மத்திய விளையாட்டுத் துறை அதிகாரி ஒருவர் ‘பெத்தி’ என்ற நபரைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் அவரது வாழ்க்கைக் கதையை கேட்பதே படத்தின் மையக்கரு என கூறினார். ஆனால், அந்தக் கதையை சொல்லும் விதம் மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த தெலுங்கு சினிமாவுல பிளாஷ்பேக் சொல்றதுக்குன்னே ஒருத்தன வச்சிருப்பாங்க. அந்த பிளாஷ்பேக் சொல்ற கேரக்டர் வழுக்கட்டாயமா வந்து ஆஜராகி, நான் தான் பெத்தியோட பிளாஷ்பேக் சொல்றேன், என்ன ஃபாலோ பண்ணுங்க’ன்னு கூட்டிட்டு போறான். அவன் சொல்ற பிளாஷ்பேக் சுவாரஸ்யமா இருந்தத விட, அந்த மலையில ஏறும்போது அவங்க பட்ட கஷ்டத்தை விட நம்ம பட்ட கஷ்டம்தான் பெருசா இருந்துச்சு.


மேலும், பெத்தியோட வீரதீர செயல் எல்லாம் சொல்ல போறான்னு நினைச்சா, ஜான்வி கபூர் கிட்ட என்னென்ன கசமுசா வேலை எல்லாம் பண்ணாரு அப்படிங்கிற மேட்டர்தான் சொல்லிக்கிட்டு இருக்கான். நாமும் அவன் மேட்டருக்கு வருவான்னு வெயிட் பண்ணா, மறுபடியும் அதே கதையத்தான் சொல்லிக்கிட்டு இருக்கான்.

அப்புறமா ரெஸ்லிங் கோச்சா சிவராஜ்குமாரை காட்டுறாங்க. ஒரு குழந்தைய கூப்பிட்டு காட்டுனா கூட இவர ரெஸ்லிங் கோச்சா காட்டலாமான்னு தலையாட்டிரும். அவரை காஸ்ட் பண்ணிருக்காங்கன்னா, இவங்க எந்த அளவுக்கு படம் எடுத்துருப்பாங்கன்னு பாருங்க.

சாதாரணமாவே ஒரு ஸ்போர்ட்ஸ் டெம்ப்ளேட் படம்னா அதுக்கு ஒரு மினிமம் கேரண்டி இருக்கும். அதை யார் எடுத்தாலும் நல்லாதான் இருக்கும். இவங்க ஒரு நல்ல கதையவே வச்சுக்கிட்டு, ஹீரோக்கு மாஸ் ஏத்துறேன் பாருன்னு சொல்லிட்டு ஒரு உப்பு சப்பு இல்லாத ஸ்கிரீன்பிளே பண்ணி, ஏகப்பட்ட காசு செலவழிச்சு பூரா காசையும் வீணடிச்சுப்புட்டாங்க.

ஆகவே உங்க காசையும் நேரத்தையும் வீணாக்கிறாதீங்க. வீட்டில இருந்தபடியே ஜாப்பனீஸ் கத்துக்குங்க என்று கிண்டலாக தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.  

Advertisement

Advertisement