தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் டாப்சி பன்னு. வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் இவர், தனது வெளிப்படையான பேச்சாலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் மற்றும் உறவுகள் குறித்து டாப்சி பன்னு பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சினிமா துறையில் பணியாற்றும் பலரும் தங்களுடைய வாழ்க்கையில் உண்மையான காதலைத் தேடிக் கொண்டிருப்பதாக டாப்சி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தற்போதைய காலகட்டத்தில் ஒரு உறவை நீண்ட காலத்திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்வது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்றைய தலைமுறையினர் தற்காலிகமான சந்தோஷங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்களா என்ற கேள்வியையும் டாப்சி முன்வைத்துள்ளார். உறவுகளில் நீடித்த புரிதல் மற்றும் உண்மையான அன்பு என்பது மிகவும் முக்கியமானது என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
இதனிடையே, “என்னுடைய தனிப்பட்ட அனுபவம் இதிலிருந்து வேறுமாதிரி இருக்கிறது” என்று டாப்சி கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. அவரது இந்த கருத்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு காதல் மற்றும் உறவுகள் குறித்து டாப்சி வெளிப்படையாக பேசியிருப்பது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!