• Sep 30 2026

ஒரு விளம்பரத்துக்கு இத்தனை கோடியா? அஜித்தின் சம்பளத்தால் ஷாக்கில் நெட்டிசன்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், பொதுவாக விளம்பர படங்களில் நடிப்பதை தவிர்த்து வருபவர். ஆனால், கார் ரேஸ் தொடர்பான தனது முயற்சிகள் மற்றும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தை சொந்தமாக தயாரிக்க வேண்டிய சூழ்நிலை காரணமாக, சமீபத்தில் சில விளம்பரங்களில் நடிக்க அவர் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில், Compa Cola மற்றும் NOVA என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்காக அஜித் விளம்பர படங்களில் நடித்ததாக தகவல்கள் வெளியாகின. இதில் Compa Cola விளம்பரம் சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ஆனால், அந்த விளம்பரத்திற்கும், குளிர்பானத்திற்கும் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

மறுபுறம், NOVA நிறுவனத்திற்காக அஜித் நடித்த விளம்பரம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்த விளம்பரத்திற்காக அஜித்துக்கு ரூ.40 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், அதில் ரூ.20 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் தகவல். மீதமுள்ள ரூ.20 கோடியை விளம்பரம் வெளியான பிறகு வழங்குவதாக நிறுவனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஆறு மாதங்கள் கடந்தும் விளம்பரம் வெளியாகாததால் அஜித் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து NOVA நிறுவனத்திற்கு அஜித் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னர், தற்போது அந்த விளம்பரத்தை வெளியிடும் பணிகளை NOVA நிறுவனம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், அஜித்துக்கு வழங்க வேண்டிய மீதமுள்ள ரூ.20 கோடி சம்பளம் எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement