நடிகை ராதிகா ஆப்தே, தனது அந்தரங்க வீடியோ கசிந்த சம்பவத்திற்குப் பின்னர் தான் எதிர்கொண்ட மனரீதியான பாதிப்புகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ராதிகா ஆப்தே, வீடியோ கசிந்ததைத் தொடர்ந்து தன்னால் பல நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “எனது அந்தரங்க வீடியோ கசிந்ததைத் தொடர்ந்து, 4 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தேன். எனது பாதுகாப்பிற்காக டிரைவர் மற்றும் உதவிப் பணியாளரை என்னுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டேன். அத்தருணம் என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது” என தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான விடயம் பொதுவெளியில் கசிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம் தன்னை வெகுவாக பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா பிரபலங்களின் தனியுரிமை மற்றும் இணையத்தில் தனிப்பட்ட உள்ளடக்கங்கள் கசிவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், ராதிகா ஆப்தேவின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரது இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன.
Listen News!