நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் தொடர்பான விஷயங்களை வெளிப்படையாக பேசக்கூடியவர். குறிப்பாக, தனது காதல் உறவுகள் குறித்தும் அவர் சமூக வலைத்தளங்கள் மற்றும் நேர்காணல்களில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஸ்ருதி ஹாசன் கடந்த காலத்தில் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அந்த உறவு திருமணம் வரை செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் அந்த காதல் உறவு பின்னர் பிரேக்கப்பில் முடிந்தது. அதன் பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, தற்போது சிங்கிளாக இருப்பதாக கூறி வருகிறார்.

இந்நிலையில், 40 வயதாகும் ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கையில் ஒரு துணை இருப்பது முக்கியமானதாக இருக்கலாம் என்றாலும், அதற்காக திருமணம் செய்துகொள்வது அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாய்மை மீது தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் ஸ்ருதி கூறியுள்ளார். எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது அல்லது குழந்தையை தத்தெடுப்பது என இரு வாய்ப்புகளையும் தான் யோசித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் என்பது தனிப்பட்ட முடிவு என்றும், தனது வாழ்க்கையை தனக்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ள விரும்புவதாகவும் ஸ்ருதியின் கருத்துகள் அமைந்துள்ளன. அவரது இந்த வெளிப்படையான பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.
Listen News!