கடந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படங்களில் ஒன்றான ‘மீசைய முறுக்கு 2’, தற்போது பாக்ஸ் ஆபிஸில் தனது வசூல் பயணத்தை தொடர்ந்து வருகிறது. திரைப்படம் வெளியாகி 5 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் வசூல் செய்துள்ள தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் ஹிப்ஹாப் ஆதி, ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவரே இயக்கி, இசையமைத்து நடித்துள்ள இப்படத்தில் நகைச்சுவை, எமோஷன் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ரம்யா ரங்கநாதன், கருணாஸ், கெத்திகா ஷர்மா, சைத்ரா, நாசர், ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, கானா இசை மற்றும் பாடகர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதேநேரம், படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.33 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் மூன்று நாட்களில் நல்ல வசூலை குவித்த இப்படத்திற்கு, கடந்த இரண்டு நாட்களில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், வரும் வார இறுதியில் வசூல் மீண்டும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!