• Oct 15 2026

ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமார் ரோல் இதுதானா.? லீக்கான தகவலால் குஷியில் ரசிகர்கள்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக ‘ஜெயிலர் 2’ உருவாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் சிவராஜ்குமாரும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், படத்தில் தனக்கு மிகப்பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், தான் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ரஜினிகாந்துடன் மீண்டும் இணைந்து நடித்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் சிவராஜ்குமார் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தன்னுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் மிகவும் சிறப்பானவை என்றும், குறிப்பாக தனது தந்தை ராஜ்குமார் குறித்து ரஜினிகாந்த் பேசும் விஷயங்கள் தன்னை நெகிழச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ஒரு மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாமல், சிறந்த மனிதரும் கூட என சிவராஜ்குமார் புகழ்ந்து பேசியுள்ளார். ஏற்கனவே ‘ஜெயிலர்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ‘ஜெயிலர் 2’வில் அவர்களது கூட்டணி எப்படி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement