• Sep 28 2026

‘மீசைய முறுக்கு 2’ படத்துக்கு இவ்வளவு தான் வரவேற்பா.? வெளியான வசூல் விபரத்தால் ரசிகர் ஷாக்

shali / 52 minutes ago

Advertisement

Listen News!

மீசைய முறுக்கு 2 திரைப்படம் 3 நாட்களில் ரூ.40 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தார். இதன்பின்னர், 2017ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவான அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


இதன் தொடர்ச்சியாக சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தை ஆதி இயக்கியுள்ளார். ஆனால், முதல் பாகத்தைப் போல தனது வாழ்க்கையை மையமாகக் கொள்ளாமல், இம்முறை கானா இசை மற்றும் கானா கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார்.

இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், சைத்ரா, நாசர், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்தே வசூலில் கவனம் ஈர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement