மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் நிவின் பாலி. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் அவரிடம், சமீபகாலமாக ‘கம்பேக்’ குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் அஞ்சலி கதாநாயகியாகவும், சூரி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் நிவின் பாலியிடம், ‘கம்பேக்’ என்ற வார்த்தையை அவர் எப்படி பார்க்கிறார் என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிவின் பாலி, “ரொம்ப நாளாச்சு ‘கம்பேக், கம்பேக்’ என்று கேட்டு கேட்டு... இப்போது என் பெயரே ‘நிவின் பாலி கம்பேக்’ என்று மாறிவிட்டது போல இருக்கிறது. தனியாக எந்தப் படத்தையும் கம்பேக் என்று சொல்ல வேண்டாம். எனக்கு எல்லா படமுமே கம்பேக்தான். இந்தப் படமும் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல கம்பேக்காக இருக்கட்டும்” என சிரித்தபடி தெரிவித்தார்.
நிவின் பாலியின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையில், நயன்தாராவுடன் அவர் நடித்துள்ள ‘டியர் ஸ்டூடன்ஸ்’ திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ திரைப்படத்திலும் நிவின் பாலி நடித்து வருகிறார்.
Listen News!