• May 30 2026

ரோபோ சங்கரின் கடைசி படம் எப்படி? “ஈகோ ராமன்” விமர்சனம் இதோ..!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான புதிய திரைப்படமான “ஈகோ ராமன்” குறித்து பத்திரிகையாளர் ஆர்எஸ் கார்த்திக் தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார். மறைந்த நடிகர் ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம், அவரது கடைசி திரைப்படங்களில் ஒன்றாகும் என்பதால் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் ரோபோ சங்கர் ஒரு ஆசிரியராக நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் சிலருக்கு நல்ல ஆசிரியராகவும், சிலருக்கு கடுமையானவராகவும் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவன் அவரை முழுமையாக நம்பும் நிலையில், ஆசிரியர் எடுத்த சில முடிவுகள் கதையின் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளன.

மாணவனுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான உறவு, நம்பிக்கை, பாசம், மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவற்றை மையமாக கொண்டு கதை நகர்கிறது. குறிப்பாக ஒரு மாணவனின் வாழ்க்கையில் ஆசிரியர் ஏற்படுத்தும் தாக்கம் கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.


ரோபோ சங்கருடன் பிக் பாஸ் சிபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாணவனாக அவர் தனது காதல், வாழ்க்கை சவால்கள் மற்றும் ஆசிரியரின் தாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் நடித்துள்ளார். .

கோயம்புத்தூர் சூழலில் நடைபெறும் இந்த கதை, சில இடங்களில் வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், திரைக்கதை வேகம் மற்றும் கதை நகர்வு சில இடங்களில் மெதுவாக இருப்பதாக விமர்சனம் தெரிவிக்கிறது.

ரோபோ சங்கரின் நடிப்பு அவரது உடல்நிலை சவால்களையும் மீறி சிறப்பாக இருந்ததாகவும், படம் அவருக்கு ஒரு நினைவாக இருக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில், “ஈகோ ராமன்” ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் எனவும், ஒருமுறை பார்த்து ரசிக்கலாம் எனவும் அவ்ருடைய விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement