• Jan 19 2025

ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் மீண்டும் தலைதூக்குமா? பாக்கியாவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், எழில் ப்ரொடியூசரிடம் எவ்வளவோ கெஞ்சியும் அவர் ஒரு வாய்ப்பு கூட  கொடுக்கவில்லை. மேலும் தான் இன்னொருவரை தேர்ந்தெடுத்து விட்டதாக எழிலை துரத்தி அனுப்புகின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த எழில் நைட் தூங்கும்போது ரெஸ்டாரண்டில் பாக்கியாவிடம் எல்லாரும் காசு கேட்டு சண்டை போட்டு இறுதியில் அவரை போலீசார் வந்து கூட்டிச் செல்வது போல கனவு கண்டு திடுக்கிட்டு எழும்புகிறார். அதன் பின்பு அமிர்தா அவரை சமாதானம் செய்து தூங்க வைக்கின்றார்.

இன்னொரு பக்கம் கோபி சாப்பிடாமல் போனை நோண்டிக் கொண்டிருக்க ராதிகா என்ன விஷயம் என்று கேட்கின்றார். பாக்கியா நாளைக்கு 11 லட்சம் கொடுக்க வேண்டும். பணம்  கொடுக்கலாட்டி அவளுடைய கதை அவ்வளவுதான் என்று சொல்லி பேச, ராதிகா அவருக்கு திட்டுகின்றார். ஆனாலும் அவரை கம்பி எண்ண வைத்து வீட்டாக்களை தன்னிடம் எடுப்பேன் என்று சபதம் போடுகின்றார் கோபி.

இதை தொடர்ந்து பாக்கியா தன்னிடம் உள்ள பணங்களை எடுத்து வைத்து எண்ணி கொண்டு இருக்கும் போது நகைகளையும் எடுத்து வைக்கின்றார். அப்போது இனியா அங்கு வர உன்னுடைய நகைகளையும் தான் அடகு வைக்க போகின்றேன் சீக்கிரமே திருப்பித் தருகிறேன் என்று சொல்ல, நீ வாங்கின நகை தானே அதுக்கு ஏன் இவ்வளவு பீல் பண்ணுறா. இப்போதைக்கு இந்த பிரச்சனையே முடிச்சா போதும் என்று இனியாவும் பாக்கியாவுக்கு நம்பிக்கை கொடுக்கின்றார்.


இறுதியாக பாக்கியாவின் ரெஸ்டாரண்டில் வேலை செய்த பெண்கள் பாக்கியாவிடம் வந்து இந்த வேலை இல்லாவிட்டால் தாங்க மிகவும் கஷ்டப்படுவோம் என்று சொன்னதோடு ரெஸ்டாரண்டை ஒரேடியா மூடிடு வாங்கலாம் என்று பேசுகின்றார்கள் என்று சொல்லுகிறார்கள்.

இதைக் கேட்ட பாக்கியா எங்களுக்கு ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போதும் இதிலிருந்து மீண்டு வந்திருக்கின்றோம். அது போல தான் இந்த பிரச்சினையும். இன்னைக்கு யார் எல்லாம் தப்பா  சொன்னார்களோ அவர்களே நாளை நமது சாப்பாடு தான் பெஸ்ட் என்று சொல்லுவார்கள். எந்த பிரச்சனைக்காகவும் நான் எனது பிசினஸை பின் வாங்க மாட்டேன் என்று மிகவும் நம்பிக்கையாக பேசுகின்றார். இதை கேட்டு வீட்டில் இருப்பவர்களே சந்தோஷப்படுகிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement