• Oct 22 2024

பிச்சைக்கார பயலே...!! ஸ்டாரா ஜொலித்த கவினின் அதிர்ச்சியான போட்டோ ஷூட்

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக கவின் தற்போது திகழ்ந்து வருகின்றார். இவருடைய நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீஸ் ஆகின்றன. தற்போது நெல்சன் திலிப் குமார் தயாரிப்பில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ப்ளடி பெக்கர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகின்றார்.

ப்ளடி பெக்கர் திரைப்படம் இம்மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதை முன்னிட்டு நேற்றைய தினம் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றுள்ளது. தற்போது இது தொடர்பான புகைப்படங்கள், தகவல்கள் என்பன சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் யாசகர் போல நடித்த கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் 'ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன் இருந்தானாம். அவனை பிச்சைக்கார பயலே, ஏய், யோவ் என்று எப்படி வேணா கூப்பிடுவாங்களாம்' என்று கேப்ஷனும் போட்டுள்ளார்.


நடிகர் கவின் நடித்த திரைப்படங்களில் டாடா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் வசூல் ரீதியாக சாதனையையும் பெற்றுக் கொடுத்தது. அது மட்டும் இன்றி இந்த படம் தான் கவினின் கேரியரில் முக்கியமான திருப்பு முனையாக காணப்பட்டது. இதை தொடர்ந்து ஸ்டார் படத்தில் நடித்தார்.

தற்போது ப்ளடி பெக்கர் திரைப்படம் ரிலீஸ்க்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.  இந்தப் படமும் கவினுக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement