• Jan 18 2025

300 கோடி சொத்துக்கு அதிபதியான ரோகிணி.. துள்ளிக்குதித்த விஜயா! சிட்டி வைத்த செக்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வித்யாவின் வீட்டுக்குச் சென்ற பிஏ ரோகிணிக்கு கால் பண்ணுமாறு சொல்லுகின்றார். வித்யாவும் போன் பண்ணும் போது அங்கு ரோகினி இல்லாததால் விஜயா அந்த போனை எடுக்கின்றார். யார் கதைப்பது என்று தெரியாமல் வித்யா அந்த பிஏ வந்திருக்கின்றான் என்று சொல்லுகின்றார். 

அதன் பின்பு ரோகிணி வந்தவுடன் விஜயா வித்யா கிட்ட இருந்து போன் என்று கொடுக்கிறார். ஃபோனில் பேசிய பிஏ இந்த மாசத்துக்குள்ளையே காசை தருமாறும் இல்லையென்றால் வித்யா வீட்டுக்கு வந்த எனக்கு உங்க வீட்டை வந்து உண்மை சொல்ல நேரமாகாது என்றும் மிரட்டுகின்றார். அருகில் விஜயா இருப்பதால் ரோகிணி கூலாக பேசி சமாளிக்கின்றார் .

இதை அடுத்து யார் அந்த பிஏ என்று விஜயா கேட்க, அப்பாவின் நண்பர் என்று சொல்லுகின்றார். மேலும் தான் பிசினஸ் பண்ணுவதற்காக அவரிடம் லோன் கேட்டதாகவும் சொல்லுகின்றார். இதன் போது உங்க அப்பாட பேங்க்ல மூன்று கோடி இருக்குமா என்று விஜயா கேட்க, அவரைப் பார்த்து சிரித்த ரோகிணி 300 கோடி இருக்குது என்று சொல்லுகின்றார்.


இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயா வெளியே வரும்போது அண்ணாமலையிடம் ரோகிணியின் அப்பாவுக்கு 300 கோடி சொத்து இருக்காம். அது மனோஜ்க்கு வரப்போகுது என்று சந்தோஷப்பட்டு சொல்ல, அண்ணாமலை எவ்வளவு காசு இருந்தாலும் அளவா தான் சாப்பிடுவோம் அதனால கூட ஆசைப்படாத என்று அட்வைஸ் பண்ணி சொல்லுகின்றார்.

இன்னொரு பக்கம் சீதா தனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்க, உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று முத்து கேட்கின்றார். அதற்கு தனது ஆசைகளை சொல்லுகின்றார் சீதா. அதன் பிறகு முத்துவும் மீனாவும் வீட்டிற்கு வரும்போது முத்து மீனாவிடம் உனக்கு எப்படிப்பட்ட ஆசை இருந்துச்சு என்று கேட்கின்றார்.

இறுதியாக ரோகிணி சிட்டியை பார்க்க செல்கிறார். அங்கு வீடியோ எடுத்தாச்சா என்று சிட்டி கேட்க, இல்லை என்று சொல்லுகின்றார். மேலும் தனக்கு அந்த பிஏவால் நிறைய பிரச்சினையாக இருக்கின்றது என்று சொல்லவும் வீடியோ தந்தால் தான் செய்து தருவேன் என்பது போல சிட்டி சொல்லுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement