திரையுலகில் சர்ச்சைகளுக்கும், சமூக கருத்துகளுக்கும் பெயர் பெற்ற இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘திரௌபதி 2’. இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் பாகமான ‘திரௌபதி’ படம் வெளியாகி பெரும் விவாதங்களையும் கவனத்தையும் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியான இந்த இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘திரௌபதி 2’ திரைப்படத்தில், ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் பேசப்பட்ட சமூக பிரச்சனைகளின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகத்திலும் அதேபோன்ற தீவிரமான கருத்துகள் முன்வைக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் படம் வெளிவருவதற்கு முன்பே விவாதங்களை கிளப்பியுள்ளது.
முதலில், ‘திரௌபதி 2’ திரைப்படம் 2026 ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த தேதியில் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் எதுவும் இல்லை என்பதால் படத்தினை வெளியிட முடிவெடுத்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ‘திரௌபதி 2’ படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 23 இலிருந்து ஜனவரி 30 ஆம் தேதிக்கு மாற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது, அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த முடிவுக்கு இன்னொரு முக்கிய காரணம், இயக்குநர் மோகன் ஜி அஜித்தின் தீவிர ரசிகர் என்பது தான். அஜித்தின் முக்கியமான படமான ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆகும் நாளில், தனது படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என நினைத்து, ‘திரௌபதி 2’ படத்தின் ரிலீஸை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!