விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, நான்கு நாட்களில் வெளியேறிய நந்தினி தற்போது அழித்து வரும் பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் அவர் அந்த தொலைக்காட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், நந்தினி வழங்கிய பேட்டியில் அவர் கூறும் போது, பிக் பாஸ் சென்றமையினால் நான் பைத்தியக்காரி என பட்டம் சுமத்தப்பட்டேன். இதனால் என்னுடைய கேரியர் கேள்விக்குறியாகியுள்ளது. பிக் பாஸ் ஷோவில் ரியாலிட்டி என்பது இல்லை.
அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்புவதும் இல்லை. சான்ட்ரா எத்தனை முறை வெளியே போவதாக கதறி அழுது உள்ளார். அவருக்கு பேணிக் அட்டாக் வந்து இருக்குது. ஆனால் அவரை வெளியே அனுப்பினார்களா? இல்லை.
அதேபோல ரம்யா ஜோ, விஜய் சேதுபதிக்கு நேராக தெரிவித்தார். அவர் வெளியே போக தயாராக இருந்தார். ஆனால் அவரையும் வெளியே அனுப்பவில்லை. எல்லாமே அவர்கள் ஆட்டுவிக்கின்றார்கள், நாங்கள் ஆடும் கை பொம்மையாகவே காணப்படுகின்றோம்.

இப்போது கமருதீன், பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்துள்ளார்கள். இதனை ஏற்கனவே தடுத்து இருக்கலாம். பார்வதி இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு தூரம் நடந்து இருக்காது.
ஒரு மன ஆறுதலுக்காக தான் இந்த ஷோவை பார்க்கின்றார்கள். அதில் நிறைய விடயம் கற்றுக் கொள்ளுவார்கள் என்று சொல்லுகின்றீர்கள். அதில் என்னத்த கற்றுக் கொள்ளப் போகின்றார்கள்? சண்டை, சச்சரவு, லவ், கெட்ட வார்த்தைகளை தானா?
மேலும் அங்கு நடக்கிற எல்லாத்தையும் கட் பண்ணி போடுறீங்க .. 240*7 நீங்க டெலிகாஸ்ட் பண்ணுறீங்களா? கிடையவே கிடையாது. இன்னைக்கு அவங்க ரெண்டு பேரோட லைஃபும் வீணா போயிட்டு.. நானும் ஒரு பொண்ணு தான்.. பார்வதி பண்ணினது தப்பு இல்ல என்றார்.
Listen News!