• Jan 28 2026

பாரதிராஜா நலமுடன் உள்ளார்... விரைவில் வீடு திரும்புவார்.! வெளியான அறிக்கை

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

மூத்த இயக்குநரும், கிராமிய கதைகளின் முன்னோடியாகவும் திகழும் பாரதிராஜா அவர்களின் உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவலையுடன் கவனித்து வருகின்றனர்.

கடந்த மாத இறுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.


சிகிச்சை பெற்று வந்த நிலையில், சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கின. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகமே கவலையடைந்தது.

இந்த நிலையில், தற்போது பாரதிராஜா உடல்நிலை குறித்து சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் நலமுடன் இருக்கிறார் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வதந்திகளை நம்பவேண்டாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement