பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் பல்வேறு சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் மையமாக இருந்து வருகிறது. அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்பொழுது பல்வேறு கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, வெறும் 4 நாட்களில் தானாகவே வெளியேறிய நந்தினி, சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த பேட்டியில் நந்தினி,“நடுவர் விஜய் சேதுபதி, போட்டியாளர்களை போட்டியாளர்களாகவே பார்க்கவில்லை. ஒரு விஷயத்தை சொல்ல வரும்போது, அவர் அவமதிக்கும் விதத்தில் பேசுகிறார். கமல்ஹாசன் நடுவராக இருந்த வரைக்கும் நல்ல படியாக இருந்தது. விஜய் சேதுபதி வந்த பிறகு நல்ல முறையாக இல்லை.” என தெரிவித்துள்ளார். நந்தினியின் இந்த பேட்டி தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!