விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்குவது எச் வினோத் தான் என்பது 99 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒரு நிலையில் அவரை அவ்வளவு லேசில் விஜய் தேர்வு செய்யவில்லை என்றும் குறிப்பாக ஒரு இன்டர்வியூ வைத்து அவரிடம் 20 கேள்வி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு வெற்றிமாறன், அட்லி, திரிவிக்ரம், ஆர்ஜே பாலாஜி, எச் வினோத் உள்பட பலரிடம் கதை கேட்ட நிலையில் ஒரு வழியாக எச் வினோத் தான் இயக்குனர் என்பதை விஜய் முடிவு செய்துவிட்டார்.
அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’, ’வலிமை’ மற்றும் ’துணிவு’ ஆகிய மூன்று படங்களுமே சுமாரான வெற்றி பெற்று இருந்தாலும் ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றிதான் விஜய் அவர் மீது நம்பிக்கை வைக்க காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் எச் வினோத் கூறிய அரசியல் கதை தனது அரசியல் என்ட்ரிக்கு சரியாக இருக்கும் என்று விஜய் முடிவு செய்துள்ளார். அவரை அழைத்து ஒரு இன்டர்வியூ வைத்ததாகவும் கிட்டத்தட்ட 20 கேள்விகள் கேட்டு ஒரு மணி நேரம் அவர் எச் வினோத்திடம் உரையாடியதாகவும் தெரிகிறது.
விஜய் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எச் வினோத் கூறிய பதில் சுமாரானது என்றும் எச் வினோத் அந்த கேள்விகளுக்கு பதில் கூறிய வகையில் ஜஸ்ட் பாஸ் தான் ஆகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் எச் வினோத்தின் அரசியல் அறிவு பார்த்து விஜய் ஆச்சரியப்பட்டதாகவும் இந்த படத்தை கண்டிப்பாக இவர் நன்றாக கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து எச் வினோத் டிக் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படப்பிடிப்பின் இடையே எச் வினோத்துடன் நெருக்கமானால் தனது அரசியல் கட்சிக்குரிய ஆலோசனைகளையும் அவரிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் என்பதும் விஜய்யின் ஐடியாவாக உள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!