• Jan 18 2025

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வனிதா? பஞ்சுமிட்டாய் தலையுடன் வந்ததால் கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

’குக் வித் கோமாளி’ சீசன் 5 விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் வனிதா விஜயகுமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்து பஞ்சுமிட்டாய் கலரில் காஸ்ட்யூம் அணிந்து வந்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சிக்கு சில தடைகள் வந்தாலும் அதையும் மீறி தற்போது வெற்றிகரமாக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியின் இரண்டு புரமோ வீடியோக்கள் வெளியாகி உள்ள நிலையில் அடுத்த புரமோவின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் என்னை எதிர்பார்க்கலாம் என ஏற்கனவே வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த புரோமோவில் அவர் தோன்ற இருப்பதாகவும் அவர் இந்த நிகழ்ச்சியை புரமோஷன் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.

இது குறித்த படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது வனிதா விஜயகுமார் அணிந்த காஸ்டியூம் தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சுமிட்டாய் கலரில் சிங்குச்சா சிங்குச்சா பிங்க் கலர் சிங்குச்சா என்ற நிறத்தில் அவர் ஆடை அணிந்தது தான் நெட்டிசன்கள் கலாய்க்க காரணமாக இருக்கிறது.

இந்த உடை உங்களுக்கு சூப்பராக உள்ளது என்றும் நீங்கள் ஒரு ஹீரோயின் மெட்டீரியல் என்றும் தொடர்ந்து வனிதாவை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் வனிதா இந்த பிங்க் நிற உடையுடன் கூடிய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 1 டைட்டில் வின்னரான வனிதா மீண்டும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக முடியாது என்றாலும் இந்த நிகழ்ச்சியின் புரமோஷனுக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement