• Jan 18 2025

தல அஜித் படம் மிஸ்ஸிங்.. இவர்கள் தான் காரணம்..! மௌனம் கலைத்த விக்னேஷ் சிவன்..!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு. இதற்க்கு பின்னர் தற்போது விடாமுயற்சி ,குட் பேட் அக்லி திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இந்நிலையில் துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பதாக இருந்தது. பின்னர் அது சில காரணங்களினால் கைவிடப்பட்டது.


அதன் பின்னரே மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி' படமாக உருவாகியுள்ளது. இதுகுறித்து விக்னேஷ் சிவன் யு-டியூப்பில் அளித்த நேர்காணல் ஒன்றில் முதல் முறையாக பேசியுள்ளார். 'அஜித்திற்கு 'நானும் ரவுடி தான்' படம் மிகவும் பிடித்திருந்தது. அந்த சமயத்தில் அவரை நான் சந்தித்தபோது, நான் நிறைய படங்களை பார்ப்பதில்லை. ஆனால், நானும் ரவுடிதான் படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன் குறிப்பாக பார்த்திபன் கதாபாத்திரம் நன்றாக இருந்தது.


அப்படியான ஒரு கதாபாத்திரத்தை வைத்து ஒரு ஸ்கிரிப்டை கொண்டு வாருங்கள். நாம் படம் பண்ணுவோம் என்றார். அதன் பின்னர் சொன்னபடியே ஒருநாள் அவர் என்னை தொடர்பு கொண்டு உங்கள் ஸ்டைலில் ஒரு படம் பண்ணலாம் என்றார். இது ஒரு பகுதி என்றால், மறுபுறம் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு முற்றிலுமாக வேறு மாதிரி சிந்தனைகள் இருந்தது. 


ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கும் போது இதெல்லாம் இருக்க வேண்டும் என விதிகளை வைத்திருந்தனர். எனக்கு அது எதுவும் புரியவில்லை நான் கதை எழுதும்போதே இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை மாற்றியமைத்து தான் எழுதுவேன். என்னுடைய ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட மலையாளத்தில் வெளிவந்த 'ஆவேஷம்' படத்தை போன்றது. தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கு என்னுடைய கதை அமையவில்லை அதனால் அதிலிருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார். முதலில் இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. 




Advertisement

Advertisement