விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 50 நாட்களைக் கடந்த இந்த நிகழ்ச்சியில் சுவாரசியம் காணாது என்று ரசிகர்கள் கதறி வருகின்றார்கள்.
பிக் பாஸ் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் சீரியல் நடிகர் அருண். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து அதன் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தனதாக்கி கொண்டவர். அந்த சீரியலில் நெகடிவ் ரோலில் இவர் நடித்திருந்தாலும் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தே பிரபலமானார்.
d_i_a
இதைத்தொடர்ந்து நடிகர் அருணுக்கும் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு இடையே காதல் வளர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இவர்களுடைய புகைப்படங்களும் சமூக வலைதள பக்கங்களில் வைரலானது.
இந்த நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் உள்ள அருண் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அர்ச்சனா. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து வைரலாகி வருகின்றது.
Listen News!