• Jan 19 2025

ஆடி கார், பைக், சொகுசு பங்களா, தங்கமென நாக சைதன்யாவுக்கு குவிந்த பரிசுகள்.. வரதட்சணையா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் நாக அர்ஜுனா. இவருடைய மூத்த மகனான நாக சைதன்யாவும் பிரபல நடிகராக காணப்படுகின்றார். இவர் முதலாவதாக சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இவர்களுடைய வாழ்க்கை நீடிக்க வில்லை.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களிலேயே சமந்தாவுடன் உண்டான உறவை முறித்துக் கொண்டார் நாக சைதன்யா. சமந்தாவை  பிரிந்த சிறிது நாட்களிலேயே சோபிதா துலிபாலாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் டேட்டிங் செல்வதையும் வழமையாகக் கொண்டிருந்தார். இவர்கள் வெளிநாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இதைத்தொடர்ந்து நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் திடீர் என திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இதனை அதிகாரப்பூர்வமாகவே நாக அர்ஜுனா அறிவித்திருந்தார். இவர்களுடைய திருமணம் தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. 

d_i_a

இந்த நிலையில், நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணம் டிசம்ப4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இவர்களுடைய திருமணம் தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஹால்டி எனப்படும் மஞ்சள் பூசு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின்பு மெஹந்தி, சங்கீத் என்று  திருமணமே களை கட்டுவதற்கு தயாராகியுள்ளது.

இவ்வாறான நிலையில் சோபித்தாவின் குடும்பத்தினர் நாக சைதன்யாவுக்கு ஆடி கார், பைக் மற்றும் ஹைதராபாத்தில் ஆடம்பரமான சொகுசு பங்களா, தங்கம் ஆகியவற்றை பரிசாக கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல நாகர்ஜுனாவும் தனது மகனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். லெக்ஸஸ் LM MPV மாடல் கொண்ட அந்த காரின் விலை சுமார் ரூ.2.5 கோடி எனவும் தளபதி விஜயையும் இந்த காரை தான் பயன்படுத்துகின்றார் என்ற தகவலும் தற்போது வெளியாகிய வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement