• Jan 19 2025

சபையில் அண்ணாமலையை சீண்டிய வாசுதேவன்..! விஜயா கொடுத்த டார்ச்சர்! நிலைகுலைந்த ரோகிணி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், பியூட்டி பார்லரில் இருக்கும் விஜயா உங்க அப்பா மட்டுமா வாரேர், இல்லா அந்த டிக்கெட்டும் வருதான்னு கேட்க, அப்பா மட்டும்தான் வாராரு என்று சொல்லுகிறார் ரோகிணி. மேலும் உங்க அம்மா இருந்தாங்கன்னா அவங்க வந்து இருப்பாங்க பாவம் அவங்க தான் அல்பாய்ஸ்ல போய்டாங்களே என்ன சொல்ல, ரோகிணியின் அம்மாவின் முகம் மாறுகிறது. 

அதன்பின் எனக்கு மேக்கப் போட்டு விடுமாறு விஜயா கேட்க, வீட்டுக்கு வந்து போடுகிறேன் என ரோகிணி சொல்லி சமாளிக்கிறார். அதை தொடர்ந்து ரோகிணியின் அம்மா வீட்டுக்கு கிளம்புகிறார்.

இதை தொடர்ந்து ஸ்ருதியின் தாலி பிரித்துக் கொடுக்கும் பங்சனுக்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து மண்டபத்தில் வாசுதேவன் பேமிலி காத்திருக்க, அங்கு விஜயாவும் அண்ணாமலையும் தனது குடும்பத்துடன் வருகிறார்கள்.

இதைப் பார்த்து வாசுதேவன் வா அண்ணாமலை என மரியாதை இல்லாமல் கூப்பிட, எல்லாரும் திகைத்துப் போகிறார்கள். அதன் பின் வாங்க அண்ணாமலை என கூப்பிட்டு சமாளிக்கிறார்.


அடுத்ததாக முத்துவும் மீனாவும் வர, அவர்கள் ஸ்ருதியின் அம்மா அப்பா இருப்பதை பார்த்து கடுப்பில் முத்து கையைக் கூப்பி வணக்கம் போட்டு  அவர்களுக்கு கடுப்பேத்தி உள்ளே செல்கிறார்.

பிறகு தன்னை ரெடி பண்ணுமாறு மீனாவை ரூமுக்கு ஸ்ருதி  கூப்பிட, அவருடைய அம்மா ஏன் மீனாவ டிஸ்டர்ப் பண்ணுற என்று சொல்லி ஸ்ருதியை அழைத்துச் செல்கிறார்.

மீனாவும் முத்துவும் பின்னால் உட்கார்ந்து இருக்க, முத்து மௌன விரதம் போல எதுவும் பேசாமல் ஒரே இடத்தில் இருக்கிறார். வாசுதேவன் தன்னுடைய நண்பர் ஒருவரை கூப்பிட்டு அண்ணாமலையின் அருகில் இருக்க வைத்து அவர் மேலே ஷூ படுமாறு உட்கார சொல்கிறார்.

மறுபக்கம் இன்னும் சம்மந்தி வரலையா என ரோகிணியை விஜயா டார்ச்சர் பண்ணுகிறார். ரோகிணி முத்துவை குடிக்க வைத்து அவர் மூட மாத்திட்டா அவனே பெரிய பிரச்சனை பண்ணிடுவான் என வித்தியாவுடன் பிளான் போடுகிறார்.

அண்ணாமலை பக்கத்தில் உட்கார்ந்தவர் கால் தன் மீது படுவதால் வாசுதேவன் பிளான் புரிந்து கொண்ட அண்ணாமலை, அங்கிருந்து எழுந்து செல்கிறார். 

இறுதியாக ஸ்ருதியின் அம்மா, அப்பா முத்துவை வைத்து பிரச்சனை செய்வதற்காக திட்டம் போடுகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement