• Feb 01 2026

சேலை கட்டிய சின்னப்பாப்பா.. குழந்தையாகவே மாறிய நடிகை கஸ்தூரி..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!


நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையாகவே மாறி உள்ள வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் சேலை கட்டிய சின்ன பாப்பா என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி.’ஆத்தா உன் கோயிலிலே’ என்ற திரைப்படத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு அறிமுகமாகிய கஸ்தூரி கடந்த ஆண்டு கூட மூன்று படங்களில் நடித்திருந்தார், அவற்றில் ’தமிழரசன்’ ’ராயர் பரம்பரை’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

சினிமாவில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வரும் கஸ்தூரி சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பதும் அவரது அரசியல் கருத்துக்கள் காரசாரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரிக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அதில் அவர் ஜாலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சற்றுமுன் அவர் பந்துகளுடன் உள்ள தொட்டியில் குதித்து சின்ன குழந்தை போல் சிரித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் அவர் நான் சிறுவயதுக்கே சென்று விட்டேன் என்றும் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் குழந்தை உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் என்றும் சின்ன பாப்பா போல் மாறிவிட்டீர்கள் என்றும் பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement