தமிழ் சினிமாவின் முக்கியமான குடும்பக் கதைகளை மக்களிடம் எளிமையாகவும் உண்மையாகவும் கொண்டு சென்ற இயக்குநர்களில் முன்னணியில் இருந்தவர் வி.சேகர். கடந்த 10 நாட்களாக உடல் நலக்குறைவால் போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலமானார். அவரின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

வி.சேகர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர் குழுவின் தீவிர சிகிச்சையும் தொடர்ந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவு குறித்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் பலரும் உச்சத்தை தொட்டிருந்தாலும், சில நடிகர்களை முன்னேற்றியுள்ள இயக்குநர்கள் மிகக் குறைவு. அந்தப் பட்டியலில் முதன்மையானவர் வி.சேகர்.

வடிவேலுவுக்கு பல படங்களில் சிறிய நகைச்சுவைக் கதாபாத்திரங்களை வழங்கியதில் முதல் வரிசையில் இருந்தவர் வி.சேகர். அவர் வடிவேலுவை தனது படங்களில் பயன்படுத்திய விதம், அவரை மக்கள் மனதில் நகைச்சுவை நடிகராக உயர்த்த உதவியது.
ஆரம்பகட்டத்தில் வாய்ப்புக்காக திண்டாடிய வடிவேலுவின் திறனை அறிந்து, அவரை தொடர்ச்சியாக தனது படங்களில் பயன்படுத்திய இயக்குநர்களில் முக்கியமானவர் இவர். இதனால், வி.சேகர் என்பவர் வடிவேலுவின் திரை வாழ்க்கையில் முக்கிய பகுதி என்றே சொல்லலாம்.
இவ்வளவு நெருக்கமான உறவு இருந்தாலும், இயக்குநர் வி.சேகரின் இறப்பிற்கு நடிகர் வடிவேலு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.
பலரும்,"வி.சேகர் வடிவேலுவின் வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தைக் கொடுத்தவர். ஆனால் அவரின் இறப்பிற்கு ஒரு இரங்கல் கூட சொல்லாமல் இருக்கிறாரே…” என்று விமர்சிக்கின்றனர்.
Listen News!