ரஜினிகாந்தின் 173வது படத்தை நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சுந்தர் சி, திடீரென அந்தத் திட்டத்திலிருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுவரை அவர் விலகியதற்கான காரணம் என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல வித்தியாசமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
ரஜினி, கமல், சுந்தர்.சி கூட்டணி பற்றி கடந்த மாதமே ஊடகங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், சுந்தர் சி இந்த திரைப்படத்தை இயக்குவதாக அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன், இந்தப் படத்தின் இயக்குநராக சுந்தர் சி விலகியதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்த போது, "புதிதாக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருவோம். நல்ல கதை இருந்தால் மட்டுமே தேர்வு செய்வோம்" என்றார்.
மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிப்பது பற்றி கேட்கப்பட்ட போது,"அது இன்னொரு படத்தில் நடக்கும். அதற்கான கதையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்து கதை பிடிக்கும் வரை கதைகளை கேட்டுக்கொண்டே இருப்போம்" என்று பதில் கூறினார்.
இந்த நிலையில், சுந்தர்.சி அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,
எனக்கு இப்போ நிறைய பேர பார்த்தா சிரிப்பா வரும். ஒரு படம் பண்ணிட்டு சினிமானா என்னன்னு பேச ஆரம்பிச்சுடுறாங்க. டேய் பாலச்சந்திரன், பாரதிராஜா அவங்களோட படங்களை நாம நினைச்சு கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இருக்கும். அவங்களே இவ்வளவு பண்ணிட்டு அடக்கமா இருக்காங்க. நீங்க எல்லாம் ஏன்டா இப்படி ஆடுறீங்கன்னு கேட்க தோணும். நமக்கு அது வேணாம். படம் நல்லா இருந்தா ஓடப்போகுது. ரொம்ப பேசாதீங்க என்று தெரிவித்துள்ளார்.
Listen News!