• Aug 18 2025

கொளுத்துங்கடா பட்டாசு.! திரையரங்குகளில் சக்கைப் போடு போடும் கூலியின் மொத்த வசூல் வேட்டை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான கூலி திரைப்படம் இன்றளவில் மட்டும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதன் அனைத்து காட்சிகளும்  ஹவுஸ்புல் ஆகி வருகின்றன.

கூலி படத்தில் தனது நண்பரின் மர்ம மரணத்தை பற்றிய விசாரணையில் பல விஷயங்களை கண்டுபிடித்து, இறந்த நண்பரின் மகளுடன் சேர்ந்து கடத்தல்கார கும்பலுடன் மோதுகின்றார். அதில் தன் நண்பனை கொன்றவரை ரஜினி வேட்டை ஆடினாரா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதையாக அமைந்துள்ளது.


கூலி திரைப்படம் வெளியான முதல் நாளே இந்த படம் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் லோகேஷ் அரைத்த மாவையே அரைத்துள்ளார் என்று படுமோசமாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி கூலி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் நான்கு நாளுக்கான மொத்த வசூல் விபரம் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி கூலி திரைப்படம் மொத்தமாக 404 கோடிகளை நான்கு நாட்களுக்குள் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது இந்த தகவல் படு வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement