இன்று த.வெ.க தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு காஞ்சிபுரத்தில் மிகுந்த ஆதரவு மற்றும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. கரூரில் சமீபத்தில் நடந்த பிரச்சாரத்துக்கு பின், விஜய் மக்களை நேருக்கு நேர் கலந்துரையாடுவதற்காக காஞ்சிபுரத்தைத் தேர்வு செய்திருந்தார்.
காலை முதலே நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது விஜய் மக்கள் சேவை குறித்த தனது உறுதியான அரசியல் நோக்கத்தை வலியுறுத்தி இருந்தார். அதாவது, “நமக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்காக எல்லாம் செய்யணும். சட்டபூர்வமா செய்யணும்.
அதிகாரத்தோட செய்யணும். ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்கும் செய்யணும். ஒரே மாதிரி செய்யணும். ஒரே எண்ணத்தோட செய்யணும் என்கிற ஒரே லட்சியத்தோட தான் அரசியலுக்கு வந்திருக்கோம்,” என்று அவர் உணர்ச்சியோடு கூறினார்.
விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய முக்கியமான நோக்கம் மக்களுக்காகச் செயல்பட வேண்டும் என்பது தான். இந்நிலையில், விஜயின் இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!