• Aug 18 2025

2050-இல் கரப்பான் இல்லாத உலகம் நோக்கி.!AATRLA நிறுவன CEOவாக பதவி ஏற்றார் நடிகர் ஸ்ரீராம்.!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

2009ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ திரைப்படம் தமிழ் சினிமாவில் சிறார்களை மையமாகக் கொண்டு உருவான முக்கியமான படங்களில் ஒன்றாகும். அந்தப் படத்தில் ஜீவா என்ற கதாபாத்திரமாக மனதை கவர்ந்த நடிகர் ஸ்ரீராம், தனது உண்மையான நடிப்பால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார்.


இப்போது, அந்தச் சிறுவன் வளர்ந்து, தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். நடிகர் ஸ்ரீராம், தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியாவை அண்மையில் திருமணம் செய்துள்ளார். ஆரம்பத்தில் ‘தோழி’ எனக் கூறி குடும்பத்துக்கு அறிமுகம் செய்த பிரியாவை, பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


திருமணத்தை அடுத்து, தொழில்நுட்பத் துறையிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ள ஸ்ரீராம், தற்போது AATRLA என்ற புதிய தலைமுறை எரிசக்தி நிறுவனத்தின் CEO ஆக பதவி ஏற்றுள்ளார். “2050-ஆம் ஆண்டுக்குள் கரப்பான் இல்லாத ஒரு நாடக மாறவேண்டும் என்பதே எமது நிறுவனத்தின் இலக்கு” என அவர் கூறுகிறார். பசுமை எதிர்காலத்திற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ள இந்த புதிய முயற்சி, சமூக நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்துவதாகும்.


Advertisement

Advertisement