விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 தற்போது நடுப்பகுதியை தாண்டி சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்கள் இடையிலான தகராறு, நட்பு,உணர்ச்சி வெடிப்புகள் என ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்து வரும் நிலையில், இன்று வெளியான புதிய ப்ரோமோ ரசிகர்களை முழுமையாக அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

49ஆம் நாளுக்கான ப்ரோமோவில் பார்வதி, பிக்பாஸ் வழங்கிய டாஸ்க் கார்டை வாசிக்கின்றார். அதில், “வீட்டிற்குள் இரண்டு மாருதி சுசுகி கார்கள் வரும். நாமினேஷனில் உள்ள கெமி மற்றும் பிரஜன் இருவரும் ஒவ்வொரு கார்களில் ஏற வேண்டும்.
அவர்கள் ஏறிய பிறகு இரண்டு கார்களும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும். ஆனால்… ஒரு கார் மட்டும் திரும்பி வராது. அந்த காரில் சென்ற நபர் எலிமினேட் செய்யப்பட்டவர்.” என்று வாசித்தார் பார்வதி.

இந்த டாஸ்க் அறிவிப்பினை கேட்ட பிரஜனின் மனைவி சாண்ட்ரா கதறி அழுகின்றார். இந்நிலையில், இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Listen News!