• Oct 23 2025

அனுஷ்கா நடிக்கும் ‘காதி’ படத்தின் அடுத்த அப்டேட்...!இரண்டாவது பாடல் எப்போது தெரியுமா?

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி MR பொலிஷெட்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் அனுஷ்கா தனக்கே உரித்தான கதாபாத்திரத்தில் மீண்டும்  நடித்து வருகின்றார். 


இப்போது, அனுஷ்கா நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் திரைப்படம் ‘காதி’ (Ghaati). இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். முக்கியமாக, இந்த திரைப்படம் மூலம் தமிழ் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார், என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


‘காதி’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இப்படம் action, emotion மற்றும் gripping storytelling ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இசை ரசிகர்கள் மற்றும் அனுஷ்கா, விக்ரம் பிரபு ரசிகர்களுக்கு இது ஒரு சந்தோஷ செய்தியாகவுள்ளது.

Advertisement

Advertisement