தமிழ் மற்றும் மலையாள இசை உலகில் பெயர் பெற்ற பின்னணி பாடகி சித்ரா ஐயரின் சகோதரி, கேரளாவை சேர்ந்த 52 வயதான சாரதா ஐயர், சமீபத்தில் ஓமனில் நடந்த மலையேற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான செய்தி தமிழ்நாடு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாரதா ஐயரின் உயிரிழப்பின் பின்னணி, ஜனவரி 2 ஆம் திகதி அவர் குழுவுடன் வாடி குல் பகுதியில் மலையேற்றம் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதி கரடுமுரடான, குறுகிய பாதைகளால் காணப்படுகின்றது.

இதன்போதே சாரதா ஐயர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் அவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
சாரதா ஐயரின் உடல் தற்போது கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், ஜனவரி 7 ஆம் திகதி, தாழவா நகரில் உள்ள குடும்பத்தின் மூதாதையர் வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாகவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
Listen News!