விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ ஒவ்வொரு வாரமும் வெளியாகிக் கொண்டுள்ளன. அந்த வகையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பாக்யா வீட்டிற்கு ராதிகாவையும் மயூவையும் கோபி கூட்டி வருகின்றார். இதற்கு மறுப்பு தெரிவிக்க மறுத்த பாக்கியா அவர்களிடம் வாடகையை வாங்கிவிட்டு தனது வீட்டிலேயே தங்க வைக்கின்றார். இதனால் ஈஸ்வரிக்கும் ராதிகாவுக்கும் பழையபடி சண்டை நீளுகிறது.
தற்போது வெளியான ப்ரோமோவில், கோபியும் ஈஸ்வரியும் வாக்கிங் போக வெளிக்கிட, இடையில் வந்த ராதிகா வாங்க நாங்க போகலாம் என்று கோபியை இழுத்துச் செல்கின்றார். இதனால் ஈஸ்வரி என்ன செய்வது என்று தெரியாமல் வாசலில் நிற்கின்றார்.
இதைத்தொடர்ந்து கோபிக்கு இன்றைக்கு செக்கப் இருக்குது என்று ராதிகாவிடமிருந்து டாக்குமெண்ட்ஸை வாங்குகின்றார் ஈஸ்வரி. ஆனாலும் அவர் கோபியுடன் ஹாஸ்பிடல் செல்கிறார். அவருடன் ஈஸ்வரி வந்த போதும் நான் கோபியை கூட்டிச் செல்கிறேன் என கோபியின் கைகளை பிடித்து ராதிகா இழுத்துச் செல்கிறார்.
இறுதியில் ஈஸ்வரி சோபாவில் சோகமாக படுத்து இருக்க, அங்கு வந்த கோபி என்ன பிரச்சினை அம்மா என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி அவ நேற்று வந்தவடா, டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்கிறார்.
அதற்கு கோபி டிரெஸ்ட் தான் காரணமாம் என்று சொல்ல, நான் இனி ஒன்றுமே கதைக்க மாட்டேன். எனக்கு நீ தான் முக்கியம் என கோபியிடம் சரணடைகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!