• Jan 07 2025

எனக்கு ஹேட் ஆகுது! அப்பாக்கும் எனக்கும் இடையே போட்டி! நடிகை அதிதி ஷங்கர் பேட்டி

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகை அதிதி நடிகையாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஆகாஷ் முரளியுடன் நேசிப்பாயா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின்  ப்ரோமோஷன் பேட்டில் கலந்து கொண்ட நடிகை அதிதி " இந்த பொங்கல் எனக்கும் அப்பாகும் பெரிய கிலேஷ் இருக்கு" என்று கலகலப்பாக பேசியுள்ளார். 


பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் தான் நடிகை அதிதி ஷங்கர். இவர் தற்போது நேசிப்பாயா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பேட்டில் கலந்து கொண்ட இவர் படம் குறித்தும் பேஷனல் லைப் குறித்தும் பேசியுள்ளார். அவர் கூறுகையில் " என்னுடைய படத்தின் ப்ரோமோஷனில் தொகுப்பாளர்கள் பேசியதை கேட்டு கொஞ்சம் ஷைய் ஆகிட்டேன். ஆனா அவங்க சொன்னாங்க எல்லார்கிட்டயும் கேட்டு தான் சொன்னோம் என்று சோ ஹாப்பி தான். நானும் சிவகார்த்திகேயனும் நல்ல குளோஸ் சோ அதான் நிகழ்ச்சியில் அவரோட கொஞ்சம் கலாட்டா பண்ணிட்டு இருந்தேன்" என்று கூறினார். 


மேலும் சமீபத்தில் இவர் மீது எழுந்த ட்ரோல் சம்மந்தமாக எழுந்த கேள்விக்கு இவ்வாறு கூறினார். "நான் அந்த மேடையில் பாடியதை வைத்து வந்த நிறைய மீம்ஸ் பார்த்து நான் சிரிச்சி இருக்கேன், கமெண்ட் பண்ணி இருக்கேன். ஆனா சில நேரங்களில் ஏன் இப்படி பண்ணுறாங்க என்று தோணும் ஒருத்தவங்களை ஹேட்  பண்ணித்தான் இதை எல்லாம் பண்ணனுமா என்று தோணும் கலாய்க்கலாம் அதுக்காக இவ்வளோ வேணாமே என்றார். 


மேலும் நான் எப்போவும் சிரிச்சிட்டே அப்படியே கடந்து போயிருவேன் அதுனால வீட்டுல உள்ளவங்களை அது பாதிக்காது என்று கூறினார்.  இந்த  "பொங்கலுக்கு என்னுடைய நேசிப்பாயா படமும் ரிலீசாகுது அப்பாவின் கேம் சேஞ்சர் படமும் ரிலீசாகுது பொங்கலுக்கு எங்க வீட்டில் தான் கிலேஷ் ஆகும் போல இரண்டு படமுமே நல்லா இருக்கும் கட்டாயம் பாருங்க" என்று கூறியுள்ளார். 



Advertisement

Advertisement