தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் பிரியங்கா மோகன், தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில், ஒரே ஆண்டில் நான்கு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ படத்திலும் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து வரும் மாரி செல்வராஜின் படத்தில் பிரியங்காவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

மேலும், இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதோடு, நடிகர் கவினுக்கு ஜோடியாகவும் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், ஒரே ஆண்டில் நான்கு படங்களில் பிரியங்கா மோகன் நடிப்பது தமிழ் சினிமாவில் அவருடைய மார்க்கெட்டை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து இடம்பிடிப்பது, அவரது அடுத்தகட்ட சினிமா பயணத்திற்கு முக்கியமான திருப்பமாக அமையலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!