• Sep 21 2026

நெருக்கமான காட்சிகளில் நடிக்க வற்புறுத்தினர்கள்..– நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, திரைப்படங்களில் நடிகர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து பேசியுள்ள கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

பல்வேறு மொழிகளில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ராதிகா ஆப்தே, சில படங்களில் கதைக்கு தேவையில்லாத வகையில் நெருக்கமான காட்சிகளில் நடிக்குமாறு தன்னை வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சில திரைப்படங்களில் கதைக்கு சம்பந்தமே இல்லாத நெருக்கமான காட்சிகளில் நடிக்குமாறு தன்னை வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளில் உள்ளாடை மட்டும் அணிந்து நடிக்க முடியுமா என்றும் தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு தான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு நடிகர் ஏற்கனவே நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார் என்பதற்காக, அவர் தொடர்ந்து அதேபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதிப்பார் என்று நினைக்கக்கூடாது என்றும் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர்களின் தனிப்பட்ட விருப்பங்களையும் எல்லைகளையும் மீறி அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பது சரியல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ராதிகா ஆப்தேவின் இந்த வெளிப்படையான கருத்துகள் தற்போது திரையுலகில் பேசுபொருளாகி வருகின்றன.


Advertisement

Advertisement