• Sep 21 2026

திருமணத்துக்கு பிறகும் வாழ்க்கையில் மாற்றமில்லை.. விஜய்தேவரகொண்டா குறித்து ராஷ்மிகா

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது திருமண வாழ்க்கை மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா குறித்துப் பேசியுள்ள கருத்துகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

ஒரு பேட்டியில் பேசிய ராஷ்மிகா, திருமணத்துக்குப் பிறகு தனது வாழ்க்கையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்தபோதிலும் திருமணம் செய்துகொண்டதாகவும், அதனால் தனது தொழில்முறை பயணம் வழக்கம்போலவே தொடர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் விஜய் தேவரகொண்டாவுடனான தனது உறவு குறித்தும் ராஷ்மிகா வெளிப்படையாக பேசியுள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், தற்போது ஜோடிகளாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர் என்றும், தனது வேலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் என்றும் ராஷ்மிகா கூறியுள்ளார்.

அதேபோல், விஜய் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் அவருடன் நேரம் செலவிடுவதற்காக தனது தூக்க நேரத்தையும் குறைத்துக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது ஒரு நாளைக்கு சுமார் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த வெளிப்படையான பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவரது கருத்துகள் குறித்து தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement