பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே பரபரப்பான திருப்பத்தை சந்தித்துள்ளது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போட்டியாளராக களமிறங்கிய பிளாக் பாண்டி, தற்போது நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் பிளாக் பாண்டி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால், அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தபோது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து ஒரு வாரம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவப் பிரச்சனை காரணமாக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. இது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல கனவுகளுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிளாக் பாண்டி இவ்வளவு சீக்கிரமே வெளியேறுவது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இது நிரந்தர வெளியேற்றமா அல்லது தற்காலிகமாக வெளியேறுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையே, பிளாக் பாண்டி உடல்நிலை சரியான பிறகு மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!