• Jan 18 2025

பிரதீப் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! பிக்பாஸ் வீட்டில் இதுதான் ஒரிஜினல் தீபாவளியே!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பிரதீப்பிற்கு ரெட் காட் கொடுக்கப்பட்ட விஷயம் தான் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் சோஷியல் மீடியாக்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. 

பிரதீப் ஆண்டனிக்கு பிக்பாஸ் பிரபலங்கள் மட்டுமின்றி பல லட்சம் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், உலகெங்கிலும் வாழும் பிக்பாஸ் ரசிகர்கள் இந்த புள்ளி கேங்  குரூப் மீது பெரும் கோவத்தில் இருக்கிறார்கள். அத்துடன் எதிர்வரும் வாரத்தில் கமல் இவர்களை கண்டிப்பாக கேள்வி கேட்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். 


இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப், இம்முறை தீபாவளி விருந்தாக உள்ளே வரவுள்ளார் என தகவலொன்று கசிந்துள்ளது.

கடந்த வாரம் முதல் அர்ச்சனா மற்றும் விசித்ராவின் வாய்ஸ் ஒலிக்க ஆரம்பித்த நிலையில், புள்ளி கேங்  டீம் கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறார்கள். அதில் பிரதீப்பை பற்றி அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை சொல்லி வருகிறார்கள்.


அதிலும் ஐஸு விஷ்ணுவிடம் 'பிரதீப் நல்ல பையன் தான். இப்படியெல்லாம் சொல்லிருக்க வேண்டாம். நானும் நிக்‌ஷனிடம் எவ்வளவோ சொன்னேன். ஆனால் அவனும் கேட்கல' என்று கூறியிருக்கிறார். இதற்கு கமல் கண்டிப்பாக ஒரு பாடம் புகட்ட வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

எவ்வாறு எனினும், இதில் இன்னொரு சந்தோஷமான விஷயம் பிரதீப் தீபாவளி விருந்தாக பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அப்படி வந்தால் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதுதான் ஒரு சந்தோஷமான தீபாவளியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Advertisement

Advertisement