• Dec 03 2024

இது என்ன புது நியூசா இருக்கு... விஜய்க்கு ஜோடியாக களமிறங்கும் விக்ரமின் மகள்... நம்ம பேபி சாராவா இது...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடிகர் விக்ரமின் மகளாக நடித்து பிரபலமானவர் சாரா அர்ஜுன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது இவரா அவர் என நினைக்கும் அளவுக்கு மிக அழகாக மாறிவிட்டார்.


இவர் பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள் ஆனார். தெய்வத்திருமகள் படத்தை தொடர்ந்து சைவம் படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதன்பின் சில ஆண்டுகள் கழித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்  சிறு வயது ஆதித்த கரிகாலனின் காதலியாக நந்தினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார். இதற்காக அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.


தற்போது 18 வயதாகும் நடிகை சாரா அர்ஜுன், 34 வயதாகும் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கிறாராம். இப்படத்தை கெளதம் என்பவர் இயக்கவுள்ளார்.


மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் இனி வரும் காலங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.    

Advertisement

Advertisement