• Jan 07 2026

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ட்ரெய்லரைப் பாராட்டிய பிரபல இயக்குநர்.! வைரலான பதிவு

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான கதைக்களங்களையும், சவாலான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள அவரது புதிய திரைப்படமான ‘பராசக்தி’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் வருகின்ற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இயக்குநரான சுதா கொங்காரா, உணர்ச்சிபூர்வமான கதைகளை கையாள்வதில் தனித்துவம் பெற்றவர். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக இணைந்திருப்பதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயனுடன், முக்கிய கதாபாத்திரத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களது கதாபாத்திரங்கள் படத்தின் கதைக்களத்திற்கு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ‘பராசக்தி’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வலுவான வசனங்கள், உணர்ச்சியை தூண்டும் காட்சிகள், பிரமாண்டமான பின்னணி இசை ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.


ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து, பல திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ட்ரெய்லரை பாராட்டி, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்பொழுது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement