பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா திடீருனு யாரையோ கூட்டிக் கொண்டு வந்து நிச்சயம் பண்ணுறது தப்பு என ஈஸ்வரிக்குச் சொல்லுறாள். பிறகு எப்ப கலியாணம் பண்ணனும் என்று இனியா முடிவெடுப்பால் அதுக்குப் பிறகு நாங்கள் என்ன முடிவெடுக்கலாம் என்று ஜோசிக்கலாம் என்கிறாள். அதுக்கு ஈஸ்வரி இனியா எடுத்த முடிவத்தான் நாங்க பாத்தோமே என்று நக்கலாச் சொல்லுறாள். பின் ஈஸ்வரி பாக்கியாவப் பாத்து உன் பிடிவாதத்தால இனியாவுக்கு கிடைக்கிற நல்ல வாழ்க்கைய குழப்பப் பாக்குற என்று சொல்லுறாள்.
இதைதொடர்ந்து கோபி இங்க பாரு பாக்கியா இனியா மேல உனக்கு மட்டும் தான் அக்கறை இருக்கா எனக்கும் இருக்கு என்கிறான். பிறகு பாக்கியா பொண்ணு பாக்கும் போது எல்லாருமே நல்லாத் தான் இருக்கிறார்கள் அதுக்குப் பிறகு தானே உண்னமயான முகம் தெரியுது என்கிறாள். பின் படிக்கிற வயசில அவளுக்கு இப்ப கலியாணம் தேவையில்ல என்றாள் பாக்கியா.
பிறகு ஜெனியும் ஈஸ்வரி செய்தது தப்பு என்று சொல்லுறாள். இதைக் கேட்ட ஈஸ்வரி யார் என்ன சொன்னாலும் நாளைக்கு இனியாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கும் என்கிறாள். அதுக்கு பாக்கியா என் பொண்ணு விஷயத்தில யாரும் முடிவெடுக்கக் கூடாது என்றதுடன் நீங்க என்ன தான் சொன்னாலும் நீங்க நினைக்கிறது நடக்காது என்றாள்.
இதைக் கேட்டு ஈஸ்வரி கோபம் கொள்ளுறாள். பிறகு இனியாவ ஈஸ்வரி கூப்பிட்டு தனியாக் கதைக்கிறாள். அப்ப ஈஸ்வரி அழுது கதைச்சதப் பாத்தவுடனே இனியா என்ன செய்றது என்று தெரியாம நிக்கிறாள். பிறகு இனியா தனக்கு இந்த நிச்சயதார்த்தத்தைப் பிடிக்கல என்று பாக்கியாட சொல்லுறாள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!