• Mar 19 2025

வசூலில் கொடி கட்டிப்பறக்கும் ‘சாவா’...! திரையரங்குகளில் கொண்டாடும் ரசிகர்கள்!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

மராத்தியப் பேரரசின் வீரமிக்க அரசனாக விளங்கிய சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான 'சாவா' திரைப்படம் கடந்த மாதம் 14 முதல் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்தப் பிரம்மாண்ட படைப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சத்ரபதி சிவாஜியின் மறைவிற்குப் பிறகு, அவருடைய மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜா மராத்திய படையை தலைமையேற்று முகலாயப் பேரரசுடன் போராடுகிறார். இந்திய வரலாற்றில் இந்த விடுதலைக்காக நடந்த போராட்டங்கள் மற்றும் சம்பாஜியின் வீர வாழ்க்கை இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது.


லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படம், சம்பாஜியின் வீரத்தையும், இந்திய வரலாற்றில் அவர் ஆற்றிய தலைசிறந்த பணிகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா, சம்பாஜியின் மனைவியாக நடித்துள்ளார்.

இத்திரைப்படம் தற்பொழுது 761 கோடிக்கு மேல் வசூல் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் ‘சாவா’ திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றதனை அறிய முடிகிறது. இது போன்ற வரலாற்றுப் படங்கள் மேலும் தயாராக வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement