• Jan 18 2025

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான 'அமரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் OTT ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெற்றுள்ளதை தொடர்ந்து, டிசம்பர் 5 ஆம் தேதி OTT தளத்தில் படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திரையரங்குகளில் அமரன் மிகுந்த வரவேற்பை பெற்றதை கருத்தில் கொண்டு, திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் சிவகார்த்திகேயனையும், தயாரிப்பாளர் கமல்ஹாசனையும் சந்தித்து, படம் குறைந்தது ஒரு மாதம் கழித்து மட்டுமே OTT தளத்தில் வெளியாக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, Netflix 28 நாட்களுக்குள் ரிலீஸ் செய்யாமல், ஒரு மாதம் கழித்து வெளியிட திட்டமிட்டுள்ளது.

OTT தளத்தில் ரசிகர்கள் வேகமாக திரும்பி வரும் சூழலில்,திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அமரன்' OTT ரிலீஸாகும் செய்தி ரசிகர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement