• Jan 18 2025

நயன் – விக்கி காதலிக்க முதல் காரணம் நான்தான்..! மிர்ச்சி சிவா சொன்ன அதிர்ச்சி தகவல்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை நயன்தாரா தனது நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசம் இழுத்து வைத்துள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்த நயன் காதல் வாழ்க்கையில் தோல்வியையே சந்தித்தார். அதன் பின்னர் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார்.


சில வருடங்கள் இருவரும் காதல் ஜோடியாக ஊரை சுற்றி வந்தனர். அதன்பின் 2022ம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இருவரும் பெற்றோராக மாறினார்கள்.


இந்நிலையில், நடிகர் மிர்ச்சி சிவா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்குதான் வந்தது. நான் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக நயன்தாரா எனக்கு ஜோடியாக நடித்திருக்க மாட்டார்.


அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை எனில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவை பார்த்திருக்கவே மாட்டார். இருவருக்கும் திருமணமே ஆகியிருக்காது. எனவே, இன்னைக்கு விக்னேஷ் சிவன் இவ்வளவு ஹேப்பியாக இருப்பதற்கு நான்தான் காரணம்’ என ஜாலியாக பேசினார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement