• Dec 03 2024

உங்க ரூல்ஸ் RJ பாலாஜிக்கு இல்லையா? நீதி, நேர்மை எல்லாம் வாயில் மட்டும் தானா?

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

சமீபத்தில் கங்குவா படம் வெளியான போது இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்களை அளிக்க தொடங்கினார்கள். இந்த படம் டோட்டலா வேஸ்ட்... எல்லாருமே கத்திக் கொண்டிருக்கின்றார்கள்.. என்ன பேசுறாங்கன்னு புரியவில்லை.. சம்பந்தமே இல்லாமல் காட்சிகள் இருக்குது.. என்று ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்களை அடுக்கினார்கள்.

இது கங்குவா படத்தின் வசூலை பெரிதும் பாதித்தது. இதன் காரணத்தினால் இனிமேல் வெளியாகும் படங்களுக்கு தியேட்டருக்கு வெளியே இருந்து யாரும் பப்ளிக் ரிவியூ எடுக்கக் கூடாது என்று புது ரூல்ஸ் ஒன்றை திரைப்பட சங்கத்தினர் கொண்டு வந்தார்கள்.

அதேபோல ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான தனஞ்செழியனும் சூர்யா மீதுள்ள வன்மத்தால் சிலர் இவ்வாறு செய்வதாகவும், சில அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் கங்குவா படத்திற்கு எதிராக கருத்துக்களை சொல்லி அதனை காலி செய்து விட்டார்கள் என்றும் பேட்டி கொடுத்திருந்தார்.

d_i_a

இதை தொடர்ந்து கடந்த வாரம் வெளியான படங்களுக்கும் அதன் பின்பு வெளியான ஒன்பது படங்களுக்கும் எந்த ஒரு பப்ளிக் ரிவ்யூம் யாரும் எடுக்கவில்லை. இந்த காரணத்தினால் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் பற்றிய விமர்சனம் ரசிகர்களுக்கு சென்றடையவில்லை என பல தயாரிப்பாளர்களும் தெரிவித்து இருந்தார்கள்.


இந்த நிலையில், ஆர். ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் படத்திற்கு பாசிட்டிவ்  விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், மைக்கை தூக்கிக்கொண்டு ஆர்ஜே பாலாஜியே பப்ளிக் ரிவ்யூ எடுக்க போயுள்ளார். இதை சுட்டிக்காட்டிய ப்ளூ சட்டை மாறன் 'உங்க ரூல்ஸ் ஆர்.ஜே பாலாஜிக்கு இல்லையா'.?' என கேள்வி எழுப்பி உள்ளார். தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.

மேலும் பப்ளிக் ரிவ்யூக்கு தடை விதித்ததால் சின்ன படங்கள் பாதிக்கப்படும் என எல்லோருமே சொல்கின்றார்கள். கடந்த வாரம் வெளியான படங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. இதற்கு திருப்பூர் சுப்ரமணி என்ன சொல்லப் போகின்றார். 

பப்ளிக் ரிவ்யூ தடை போட்டதால் 10 சின்ன படங்கள் ஓடவில்லை. ஆனால் அடுத்து வரும் புஷ்பா 2, விடுதலை 2, கேம் சேஞ்சர், விடாமுயற்சி போன்ற படங்களுக்கு பப்ளிக் ரிவ்யூக்கு தடை போடும் துணிச்சல் உங்களுக்கு உண்டா என கேள்வி எழுப்பி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Advertisement

Advertisement