• Jun 28 2024

நாட்டியசிகாமணிக்கு வந்த சோதனை.. எல்லாம் முத்து மீனாவின் வினையா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயாவிடம் யாரும் கிளாசுக்கு போக இல்லை என்பதால் மீனாவும் முத்தும் குருதட்சனை கொண்டு கிளாசுக்கு செல்கின்றார்கள். இதன்போது விஜயா உங்களுக்கெல்லாம் சொல்லித்தர முடியாது என்று சொல்ல, பார்வதி அவங்க குரு தட்சணையோடு வந்திருக்காங்க அதனால கத்துக் கொடு என்று சொல்லுகிறார்.

இதைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் பாட்டு போட்டு ஆடி காட்ட பார்வதியும் சேர்ந்து அவர்களுடன் ஆடுகிறார். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜயா பாட்டை நிறுத்திவிட்டு மீனாவுக்கு பரதநாட்டியம் ஆடி காட்டுகிறார் இதனை முத்து வீடியோ எடுக்கின்றார்.

ஒரு கட்டத்தில் இருவரும் ஆடிக் கொண்டிருக்க விஜயாவுக்கு சுளுக்கு பிடித்து கழுத்து திரும்பிக் கொள்கிறது. இதனால் ஆடவும் முடியாமல் தலையை திருப்பவும் முடியாமல் விஜயா அவதிப்பட்டுக் கொண்டிருக்க, முத்து அவரை காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கூட்டிட்டு வருகின்றார்.


வீட்டுக்கு வந்த விஜயா இது எல்லாம் மீனாவாலத் தான் வந்தது. இப்ப சந்தோஷமா என மீனாவுக்கு திட்டுகிறார். அதன் பின்பு பார்வதி சுளுக்கு எடுப்பதற்காக பெண் ஒருவரை கூட்டி வர அவரும் விஜயாவுக்கு வைத்தியம் பார்க்கிறார். 

விஜயாவின் கை சரியானது ஆனால் அவரின் தலையை திருப்பிக்க முடியவில்லை. ஒரு நாளில் சரியாகும் என சொல்லிவிட்டு அவர் செல்கிறார். அவர் போனதும் மீனாவை அழைத்த விஜயா, மீண்டும் இப்ப சந்தோஷமா உனக்கு நான் சம்பாதிப்பேன் என்று தானே எனக்கு இப்படி செஞ்சுட்டா என மீனாவுக்கு திட்டுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement