• Jan 19 2025

ரூ.600 கோடி பட்ஜெட் படத்திற்கு ஹைப்பே இல்லை.. கமல் ரசிகர்கள் கூட கைகொடுக்கலை.. ‘கல்கி’யின் பரிதாபம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாக இன்னும் ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் பெரிய அளவில் எந்த விதமான ஹைப்பும் இந்த படத்திற்கு இல்லை என்பதால் தயாரிப்பாளர் தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற பல பிரபலங்களை வைத்து தயாரான திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ஒரு பெரிய தொகை பிசினஸ் நடைபெற்றதாக கூறப்பட்டாலும் 600 கோடி பட்ஜெட்டுக்கு இது மிகவும் குறைவு என்றும் கமல்ஹாசன் நடித்தும் அவர் சரியாக புரமோஷனுக்கு வரவில்லை என்றும் அதனால் தமிழ்நாட்டில் ’கல்கி 2898 ஏடி’படத்தை விநியோகிஸ்தர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரபாஸ் நடித்த முந்தைய திரைப்படங்களான ’சலார்’ ‘ராதே ஷ்யாம்’ உட்பட சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில் இந்த படத்திற்கு பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்திருப்பதால் பாலிவுட்டில் ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மட்டும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு இதிகாச புராணக் கதையை படமாக்கி அதற்கு 600 கோடி ரூபாய் செலவழித்துள்ள நிலையில் புரமோஷனில் படக்குழுவினர் கோட்டை விடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தை எப்படியாவது ஹைப்புக்கு கொண்டுவர இன்னொரு ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அந்த ட்ரெய்லர் வெளியான பின்னராவது எதிர்பார்ப்பு அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement